tamilnadu

img

சொந்த ஊருக்கு 500 கி.மீ நடந்தே செல்லும் பல்கலை., மாணவர்கள்

லக்னோ: 
ஊரடங்கால், நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, தங்கள் வீட்டிற்கு செல்ல கிட்டத்தட்ட 500 கி.மீ நடந்தே செல்ல திட்டமிட்டு நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அம்பேத்கர் நகரில் காவல்துறையினர், அந்த வழியாக கொளுத்தும் வெயிலில் நடந்தே வந்த நான்கு பேரை தடுத்து நிறுத்தினர். கல்லூரி மாணவர்களான அவர்களிடம், சில உடைகள், பிஸ்கட் மற்றும் ஆகியவற்றை கொண்ட பை இருந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வடக்கு உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் பல்கலை மாணவர்கள் என்றும், அங்கிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 250 கி.மீ. நடந்து மாநிலத் தலைநகரான லக்னோவை வந்தடைந்ததாகவும்,  320 கி.மீ தொலைவில் உள்ள வாரணாசிக்கு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவர்களில் ஒருவரான மிஸ்ரா கூறுகையில், நாங்கள் பரேலியில் விடுதியில் தங்கியுள்ளோம். ஊரடங்கினால் எங்கள் குடும்பங்கள், செலவிற்கு பணம் அனுப்பின. பணம் செலவாகி வருகிறது. இந்த நிலையில்  நடந்து செல்ல முடிவு செய்தோம். நடந்து செல்வது எங்களுக்கு விருப்பமல்ல. நான் தினசரி கூலி வேலை செய்துவரும் குடும்பத்திலிருந்து வந்தவன். மிகுந்த சிரமத்துடன் அவர்கள் என்னை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் சம்பாதிக்கும்போது அதிக பணம் அனுப்புவார்கள், ஆனால் அவர்களிடமும் தற்போது பணமில்லை என்றார்.

மற்றொரு மாணவரான சுபம் சிங் கூறுகையில், ஒரு  அதிகாரி எங்களை பரேலிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலைக்கு ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றார். மற்ற இடங்களில் அதிகாரிகள் தண்ணீர், உணவு ஆகிவற்றை வழங்கினர் என்றார். செவ்வாயன்று நான்குபேரும் எஞ்சிய 320 கி.மீ தூரத்தை நடந்தே செல்வதற்கு தயாராயினர்.
 

;